சங்க கால தமிழ் இலக்கியங்களில் இருந்து சிவனைப் புகழ்ந்து குறிப்பிடும் 50 மேற்கோள்கள்
சங்க கால தமிழ் இலக்கியங்களில் இருந்து சிவனைப் புகழ்ந்து குறிப்பிடும் 50 மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன..
2300 ஆண்டுகளுக்கு முந்தைய பல நூல்கள் இவற்றுள் அடக்கம்..1. "பிறவா யாக்கைப் பெரியோன்"
-இந்திர விழவூரெடுத்த காதை:170-வது வரி
2. "செஞ்சடை வானவன் அருளின் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்"
-கால்கோள்காதை: 98-99
3. "நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி’’
-கால்கோள்காதை: 54-55
4. "தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்"
-கால்கோள்காதை: 64
5. "பெரியோன் தருக திருநுதல் ஆகஎன’’
-மனையறம் படுத்த காதை: 41
6. "திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்"
-கடலாடு காதை: 38-43
7. ‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்"
-நடுகற் காதை: 67-70
8. "ஓங்குயர் கூடல் ஊர்துயில் எடுப்ப
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்"
-ஊர்காண் காதை: 6-7
9. "அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்"
-புறஞ்சேரி இறுத்த காதை: 137
10. "ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்"
-வரந்தரு காதை: 141-142
11. "நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக"
-விழாவறை காதை: 54-55
12. "ஆலமர் செல்வன் மகன்
விழாக் கால்கோள் காண்மினோ"
-மலர்வனம் புக்க காதை: 144-145
முருகனுக்கு விழா எடுத்த நிகழ்வு பற்றி கூறுமிடத்து!
13. "இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும்.."
- சமயக்கணக்கர் தம் திறம்கேட்ட காதை 89-90
ஈசனின் இயல்புகள் மிகத்தெளிவாக எடுத்தியம்பப்பெற்றுள்ளது!
14. "மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்.." #பரிபாடல் 5: 25-27
15. "எயில் எயப் பிறந்த எரிபோல"
#கலித்தொகை 150: 05
16. "அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த
பெருந் தண் சண்பகம் போல.."
#கலித்தொகை 150: 20-21
17. "தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற் றண்ணல்.."
#பரிபாடல் 9: 6-7
18. "ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்.."
#கலித்தொகை 81: 09
19. "ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்.."
#புறநானூறு 198: 09
20. "கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே"
#புறநானூறு 251: 6-7
21. "ஆலமர் செல்வற்கு
அமர்ந்தனன் கொடுத்த.."
#சிறுபாணாற்றுப்படை 97வது வரி.
22. "நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.."
#ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து- 1
23. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்.."
#புறநானூறு 1: 7-8
24. "...வெள்ளேறு வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்.." - #திருமுருகாற்றுப்படை 151-154 25. "புங்கவம் ஊர்வோனும்.." #பரிபாடல் 8:02
26. "ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும்"
#பரிபாடல் 8:06
27. "ஆறு அறி அந்தணற்கு அருமறை பல பகர்ந்து.."
#கலித்தொகை கடவுள் வாழ்த்து-1
28. "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக ஐ இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை எடுக்கை செல்லாது உழப்பவன் போல.." #கலித்தொகை 38: 1-5
29. "ஆன் ஏற்றுக் கொடியோன்" #கலித்தொகை 26:05 30. "சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ" #கலித்தொகை 101:08 31. "படரணி யந்திப் பசுங்கட் கடவுள் இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக் குடர்கூளிக் கார்த்துவான்" #கலித்தொகை 101:21 - 26
32. "கொலைவன் சூடிய குழவித் திங்கள்"
#கலித்தொகை 103: 15 33. "எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை" #கலித்தொகை 103: 25 34. "மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் முக்கண்ணான் உருவே போல்" #கலித்தொகை 104: 11-1235. "பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல"
#கலித்தொகை 105: 13
36. "...மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையான்"
#கலித்தொகை 142: 27-28
37. "பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்"
#கலித்தொகை 150:09
38. "உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு.."
#கலித்தொகை 150:13
39 . "புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, பின்
கதுப்பு"
#கலித்தொகை 150:17
41. "பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே"
#புறநானூறு 6: 17-18
42. "ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று
அருங் கணிச்சி மணி மிடற்றோனும்"
#புறநானூறு 56: 1-2
43. "பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே" #புறநானூறு 91: 5-7
44. "நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்"
#புறநானூறு 166: 1-9
45. "ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல"
#புறநானூறு 55:05
49. "மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு" #முத்தொள்ளாயிரம் கடவுள்வாழ்த்து
ஆக்கமும்
ReplyDeleteஊக்கமும் கொண்ட
இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
மிக்க நன்றி🙏
Delete